More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • தாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்!
தாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்!
Jan 25
தாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்!

தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.



இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில்,  “சீன அரசாங்கம் தாய்வான் உட்பட அதன் அண்டை நாடுகளை மிரட்ட முயற்சிக்கும் முறையை அமெரிக்கா கவலையுடன் குறிப்பிடுகிறது.



சீனா, தாய்வான் மீதான இராணுவ, தூதரக மற்றும் பொருளாதார அழுத்தத்தை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாய்வான் பிரதிநிதிகளுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.



இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்களது பகிரப்பட்ட செழிப்பு, பாதுகாப்பு மற்றும் மதிப்புகளை முன்னேற்றுவதற்காக எங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நாங்கள் துணை நிற்போம். அதில் ஜனநாயக தாய்வான் உடனான எங்கள் உறவுகளை ஆழப்படுத்துவதும் அடங்கும்’ என கூறினார்.



சீனாவில் கடந்த 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தீவு நாடான தாய்வான் உருவானது.



ஆனாலும் தாய்வான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தேவைப்பட்டால் தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் சீன அரசாங்கம் கூறி வருகிறது. இந்த சூழலில் தாய்வானை அச்சுறுத்தும் விதமாக சீனா சமீபகாலமாக தனது தென்கிழக்குப் பிராந்தியத்தில் இராணுவ படைகளை குவித்து வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar14

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக

Mar23

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாக

Jun27

இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர

Jun11

உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. எனினும்,

Mar20

உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப

Sep26

மத்திய ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரி

May26

உலகளாவிய கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் தொடர்ந்து மந

Oct19

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக

May27

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்த

Sep17

சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி

Mar25

இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில்

Feb24

 

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனத

Mar08

12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந

Jun01

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க

Aug05