More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பேரறிவாளனை விடுதலை செய்வதில் மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம்- நிலைப்பாட்டை மாற்றியது மத்திய அரசு!
பேரறிவாளனை விடுதலை செய்வதில் மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம்- நிலைப்பாட்டை மாற்றியது மத்திய அரசு!
Jan 21
பேரறிவாளனை விடுதலை செய்வதில் மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம்- நிலைப்பாட்டை மாற்றியது மத்திய அரசு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மாநில ஆளுநரே முடிவெடுப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் இதுகுறித்து ஆளுநர் முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா குறிப்பிட்டுள்ளார்.



இதற்கு முன்னர், பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் உள்ளது என மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வாதம் முன்வைக்கப்பட்டது. எனினும் தற்போது தனது நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டுள்ளது.



முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி 1991, மே 21ஆம் திகதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உட்பட ஏழு பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.



இந்நிலையில், இவர்களின் கருணை மனுவில் முடிவு எடுப்பதில் 11 ஆண்டுகளாக தாமதம் செய்ததாகக் கூறி, பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தண்டனையை 2014இல் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.



அத்துடன், 2018, செப்டம்பா் ஒன்பதாம் திகதி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடித் தீா்மானம் நிறைவேற்றியதுடன் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.



எனினும், ராஜீவ் காந்தி கொலை வழக்கு விவகாரத்தில் வெளிநாட்டுச் சதி உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக மத்திய புலனாய்வுத் துறையால் அமைக்கப்பட்ட பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு முகாமையின் விசாரணை முடிவடையும் வரை தனது ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளின் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் நிலுவையில் உள்ளது.



இந்நிலையில், 2020 ஒக்டோபர் 11ஆம் திகதி பேரறிவாளன் தரப்பில் மேலுமொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த வழக்கில் விடுதலை கோரி தமிழக ஆளுநருக்கு 2015இல் அனுப்பிய மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழக அரசு 2018இல் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய கோப்பு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, நீதிமன்றமே இந்த விவகாரத்தில் முடிவுவெடுத்து விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.



இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் இரு ஆண்டுகளாக ஏன் முடிவெடுக்கவில்லை’ எனக் கேள்வி எழுப்பியது.



இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளான எல்.நாகேஸ்வரராவ், எஸ்.அப்துல் நஸீர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்ததுடன் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக குடியரசு்த தலைவரே முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக இன்று விசாரணை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவருக்குப் பதிலாக மாநில ஆளுநர் மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவு செய்வார் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb08

உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட

Mar15

தமிகழத்தில் இறந்து போன தம்பியின் ஆசையை நிறைவேற்ற, ஐந்

Jul17

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள

Jun25

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப

Mar12

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக

Feb18

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர

Jul24

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால

Jul02