நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர் என்றும் இந்நிலையில், ஐக்கியத் தேசியக் கட்சியை புதிய உத்வேகத்துடன் மீளக்கட்டியெழுப்பி மாற்றுக் கட்சியின் இடத்தை நிரப்பிக்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்துள்ளதாக அக்கட்சின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சிறிகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) ஐ.தே.க.வின் புதிய நிர்வாகிகள் அனைவரும் தமது பொறுப்புகளை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, கட்சியின் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும் உபதலைவராக முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமும் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவும் கட்சியின் பொருளாளராக ஏ.எஸ்.எம்.மிஸ்பாவும் பதவியேற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் விக்ரமசிங்க மேற்காண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தமது இந்த செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.