நடிகர் சிம்புவின் ஆட்டத்தைப் பார்க்க தான் காத்திருப்பதாக பிக்பொஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 10 தல திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆரி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
ஆரியின் ருவிட்டர் பதிவில், “நெடுஞ்சாலை இயக்குனர் கிருஷ்ணாவின் அடுத்த படமான ‘பத்து தல’ படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். சிம்பு, கிருஷ்ணா மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர்களின் ஆட்டத்தை பார்க்க தான் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.