அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் எல்லைச் சுவர் கட்டுமான பணிகள் ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் இரு நாட்டுக்கும் இடையே எல்லைப்பகுதியான நியூ மெக்சிகோவின் Sunland Park இல் சுமார் 644 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லைச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் பைடன் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே பலவேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதில் இந்த எல்லைச்சுவர் அமைக்கும் பணியை நிறுத்தும்படி உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.