More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழர் நலன் குறித்து பேச ராகுல் காந்திக்கு அருகதை கிடையாது- எல்.முருகன் !
தமிழர் நலன் குறித்து பேச ராகுல் காந்திக்கு அருகதை கிடையாது- எல்.முருகன் !
Jan 24
தமிழர் நலன் குறித்து பேச ராகுல் காந்திக்கு அருகதை கிடையாது- எல்.முருகன் !

தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடையாது என தமிழக பா.ஜ.க.தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரிலுள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் அவருடைய உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.



குறித்த நிகழ்வினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக பா.ஜ.க.வின் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பூத்துக்கும் 30 பேர் கொண்ட கமிட்டி அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துவிட்டது.



நானும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான சி.டி.ரவியும் விரதம் இருந்து எதிர்வருகின்ற 27ஆம் திகதி பழனியில் காவடி ஏந்தி, வழிபட இருக்கிறோம். எங்களின் வேண்டுகோளை ஏற்று தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவித்ததற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.



இதேவேளை இந்தியாவில் இருந்தே காங்கிரஸ் துரத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் எங்கும் வரமுடியாது. ஒரு இடத்தில் கூட காங்கிரசால் தனித்து போட்டியிடமுடியாது.



மேலும் ராகுல்காந்திக்கு தமிழ் பற்றி என்ன தெரியும்? ஒரு திருக்குறளை உச்சரிக்க முடியுமா? இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு காரணமே காங்கிரசும், தி.மு.க.வும் தான்.



எனவே ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கு தமிழர் நலன் பற்றி பேச எந்த அருகதையும்இ தகுதியும் கிடையாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep28

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சே

Jul09

பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்

Feb23

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் 42 வார்டுகளை திமுக வ

Apr30

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க

Jul17

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச

Sep09
Sep23

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தா

Jan19

கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மே

Dec30

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Mar06

இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய

Jul16

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு

Jul08
Mar21

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய

Mar07

உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது உலக நாடுகளில் பெரும

Mar29

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே