கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லியன் பவுண்டுகளை எட்டியதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது டிசம்பர் மாதத்தின் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
1993ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு மாதத்திலும் கடன் வாங்கிய மூன்றாவது மிகப்பெரிய தொகையாக இது பதிவாகியுள்ளது.
திறைச்சேரியின் தலைவர் ரிஷி சுனக் தனது மார்ச் மாத வரவுசெலவு திட்டத்தை தயாரிக்கும்போது அவரின் பிரச்சினைகளை புள்ளிவிபரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்த நிதியாண்டிற்கான கடன் இப்போது 270.8 பில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 212.7 பில்லியன் பவுண்டுகளாக இருந்தது.
வரவுசெலவு திட்ட பொறுப்புக்கான சுயாதீன அலுவலகம் (ஓபிஆர்) மார்ச் மாத நிதியாண்டின் இறுதியில் கடன் வாங்குவது 393.5 பில்லியன் பவுண்டுகளை எட்டும் என்று மதிப்பிட்டுள்ளது