More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு!
ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு!
Jan 22
ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு!

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான உறவை மீளமைக்க அழைப்பு விடுத்துள்ளது.



அத்துடன், உலக சுகாதார அமைப்பு மற்றும் பரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேரும் என்ற செய்தியை வரவேற்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.



சீனாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் (Hua Chunying) இன்று (வியாழக்கிழமை) ஊடக மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



மேலும், பதவியேற்பு உரையில் பைடன் ‘ஒற்றுமை’ என்ற வார்த்தையைப் பலமுறை பயன்படுத்தியதாகவும், அந்த ஒற்றுமை அமெரிக்க-சீனா உறவுகளில் தற்போது தேவைப்படுவதாகவும் ஹுவா சுனிங் கூறியுள்ளார்.



இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியின் கீழ், சீனாவுடனான பதற்றங்கள் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், கொரோனா தொற்று மற்றும் மனித உரிமைகள் ஆகிய விடயங்களில் காணப்பட்டன.



இந்நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னாள் செயலாளரான மைக் பொம்பியோ உட்பட பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகளுக்கு சீனா, ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகிய பகுதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug18

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைர

Sep29

தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரி

Mar08

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ

Mar05

 உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன

Feb14

இந்தோனேசியாவில் இராட்சத அலையில் சிக்கிய 11 பேர் உயிரிழ

Jul09

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று

Mar30

இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒர

Mar25

உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர

Aug30

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்க

Mar14

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ

Jan17

துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அ

Jan04

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயல

Jul03

அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா த

Jul02

உலகம் முழுவதும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்ட

Jun17

சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் ம