ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும் மற்றுமொரு தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகளின் பிரதம அதிகாரி சேர் சிமொன் ஸடீவன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்மஸ் முதல் வைத்தியசாலைகளில் தொற்றாளர்கள் நிரம்பி வழிவதாக ஒவ்வொருநாளும் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்டவர்களில் கால்வாசிப் பேர் 55வயதுக்கு கீழ்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவுகள் உண்மை என்றும் வைத்தியசாலைகளும் ஊழியர்களும் அசாதாரணமான முறையின் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய இராஜ்ஜியத்தில் நேற்றைய தினம் 704 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பதிவான கூடிய எண்ணிக்கை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நீங்கும் என்ற நம்பிக்கை காணப்பட்டாலும் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடுமையான கட்டுப்பாடுகளும் முடக்கமும் வெற்றியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
லண்டனின் தென் கிழக்கில் ஆர் விகிதம் 0.6 ஆக பதிவாகியுள்ளது.
80வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர ஏனைய வயது பிரிவினரிடையே வாராந்த தொற்று குறைவடைந்துள்ளதுடன் கென்டில் முதல் முறையாக புதிய திரிபடைந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த முடியாது என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இந்த நிலையில் 24 மணித்தியால கொவிட் தடுப்பு மருந்து பரிசோதனை பத்து நாட்களுக்குள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.