அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற இரண்டு நாட்கள் உள்ள நிலையில் பாதுகாப்பு எச்சரிக்கையை அடுத்து வொஷிங்டனில் உள்ள கெப்பிட்டல் வளாகத்தில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் தீ பரவுவதாக பொலிஸார் தெரிவித்ததுடன் பைடனின் பதவியேற்பு நிகழ்வு ஒத்திகையும் நிறுத்தப்பட்டது.
ஜனவரி ஆறாம் திகதி பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தி சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கெப்பிட்டல் கட்டடத்திற்கு நுழைந்து மேற்கொண்ட வன்முறையில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் கெப்பிட்டல் மற்றும் மத்திய வொஷிங்டனில் ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொது மக்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காங்கிரஸ் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன புதன்கிழமை நடைபெற உள்ள பதவியேற்பு நிகழ்வின் பின்னர் மீண்டும் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் உள்ள கொரோனா நெருக்கடி காரணமாக ஜனவரி 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்வில் கலந்துக்கொள்பவர்கள் வரையறுக்கப்பட உள்ளனர்.
வழமையாக இரண்டு இலட்சம் டிக்கட்டுகள் விற்பனையாகும் .ஆனால் இம்முறை ஆயிரம் டிக்கட்டுக்கள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளன.
கொலம்பிய மாவட்டம் மற்றும் ஐம்பது மாநிலங்களிலும் வன்முறைகள் தலைத்தூக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.