ஜனவரி 18 , 2021 அன்று அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் புதிதாக 4703 தொற்றுகள் பதவியாகி உள்ளது (வெள்ளிக்கிழமைக்கு பின்னர் பெறப்பட்ட பதிவுகள்). 24 பெப்ரவரி 2020 க்கு பின்னர் இந்தத் தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 499 931 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 14 நாட்களில் நாட்டில் மொத்தம் 36 855 தொற்றுகள் ஏற்பட்டுள்ளது- ஒரு நாள் சராசரி 2,632 ஆக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மேலும் 203 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். 24 பெப்ரவரி 2020 இல் இருந்து 20 778 பேர் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.
இறப்புகளை பொறுத்தவரை புதிதாக 121 பேர் கொரோனா தாக்கிப் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரச தகவலின் படி கடந்த 24 பெப்ரவரி 2020 க்கு பின்னர் இதுவரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 8091 பேர் பலியாகி உள்ளார்கள். ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின் படி சுவிற்சர்லாந்தில் இதுவரை மொத்தம் 8,728 பேர் பலியாகியதாக தெரிவிக்கின்றது.
தனிமைப்படுதலை பொறுத்தவரை 18 ஜனவரி 2021, 24 064 பேர் கொரோனா தொற்றின் பின்னர் தனிமைப்படுத்தலில் உள்ளார்கள். 33 313 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தக் காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். அதேவேளை 4722 பேர் அதிக கொரோனா தொற்றுகள் உள்ள நாடுகளிலிருந்து பயணம் செய்த காரணத்தால் தனிமைப் படுத்தலில் உள்ளார்கள்.
புதிதாக 48 004 கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 ஜனவரி 2020 பின்னர் மொத்தம் 4 026 690 கொரோனா சோதனைகள் சுவிற்சர்லாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை ஒருவர் மற்றவருக்கு பரப்பும் ஆர் ரேட் 0,81 ஆக உள்ளது.