More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்கள் ஆகியும் உயிருடன் இருக்கும் அதிசயம்!
சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்கள் ஆகியும் உயிருடன் இருக்கும் அதிசயம்!
Jan 19
சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்கள் ஆகியும் உயிருடன் இருக்கும் அதிசயம்!

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில் யான்டாய் நகரில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 10-ந்தேதி தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு நேரிட்டது.



இதில் சுரங்கத்தின் நுழை வாயில் பகுதி இடிந்து இதனால் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் 22 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.‌ எனினும் சுரங்க நிர்வாகம் விபத்து நடந்த 30 மணி நேரத்துக்குப் பிறகு போலீஸ் மற்றும் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்தது.



மீட்பு பணிகள் தாமதமாக தொடங்கியதால் மீட்புக்குழுவினர் சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை நெருங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனால் 6 நாட்கள் ஆகியும் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் விபத்து நடந்த 7 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் 12 பேர் உயிருடன் இருப்பது நேற்று தெரியவந்தது. சுரங்கத்தில் உள்ள ஒரு சிறிய துளை வழியாக தொழிலாளர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை மீட்பு குழுவுக்கு தெரியப்படுத்தினர்.



இது மீட்புக் குழுவிற்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான மீட்புக்குழுவினர், தொழிலாளர்கள் 12 பேரையும் பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேசமயம் மற்ற தொழிலாளர்கள் 10 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct02

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இ

Jul01

பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படு

May13

அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ

Jun18

உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந

Sep05

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jun03

பொதுபல சேனா இயக்கம் தொடர்ந்தும் இனவாத மற்றும் மதவாதத்

May23

  உக்ரைன்- ரஷ்ய போரின் முதல் மூன்று மாதங்களில், சோவியத

Nov06

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவு

Mar12

ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற

Mar21

இலங்கைக்கு இந்தியா 5 லட்சம் ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ரா ஜெனகா

Apr21

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற

Jun12

 நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தேவையால், ரஷ்ய

Aug11

இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்

Apr08

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீ

Mar02

ரஷ்யா, உக்ரைனுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்