More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • சபாநாயகரின் லேப்டாப்பை திருடிய பெண்? ரஷியாவுக்கு விற்க முயற்சி!
சபாநாயகரின் லேப்டாப்பை திருடிய பெண்? ரஷியாவுக்கு விற்க முயற்சி!
Jan 19
சபாநாயகரின் லேப்டாப்பை திருடிய பெண்? ரஷியாவுக்கு விற்க முயற்சி!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.



குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் தோல்வியடைந்தனர்.



இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது.



அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  



இந்த வன்முறையின் போது நூற்றுக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். சிலர் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் எடுத்து சென்றனர்.



இந்நிலையில்,  பாராளுமன்ற வன்முறையின் போது சபாநாயகர் நான்சி பெலோசியின் அறையில் இருந்த அவரது லேப்டாப் கம்ப்யூட்டர் திருடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாகி வருகிறது.

 



இது குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் எஃப்பிஐ அமைப்பு (அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு) பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த ரிலே ஜூன் வில்லியம்ஸ் என்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. 



 



ஜூன் வில்லியம்ஸ் தான் நான்சி பெலோசியின் அறையில் இருந்த லேப்டாப் கம்ப்யூட்டரை திருடியதாக எஃப்பிஐ அமைப்பால் குற்றம்சுமத்தப்படுகிறது.



திருடிய லேப்டாப் கம்ப்யூட்டரை ரிலே ஜூன் ரஷியாவில் உள்ள தனது நண்பருக்கு அனுப்ப முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நண்பர் லேப்டாப்பை ரஷிய உளவு அமைப்பிடம் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக எஃப்பிஐ அமைப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.



தற்போது ஜூன் வில்லியம்ஸ் பென்சில்வேனியாவில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாகவும், அவரை தேடும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.



தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால் இந்த நிகழ்வு குறித்து எஃப்பிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் லேப்டாப் தற்போது எங்கு உள்ளது என்ற தகவலை எஃப்பிஐ அதிகாரிகள் வெளியிடவில்லை.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb15

பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ

Jun16

சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறு

Mar26

துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைப

Jun12

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எட்டு மில்லியன் பைச

Jun09

தாக்கப்பட்ட போதும் பொதுமக்களை அருகில் சென்று சந்திப்

Jan31

அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ம

Jun10

மெக்சிகோ நாட்டின் மொரிலொஸ் மாகாணம் ஹர்வவசா நகரில் புத

Mar30

மறைந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலிக்கு இறுதி அஞ்ச

Mar17

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜ

Apr02

தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்

May25

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்

Mar12

உக்ரைன் அகதிகள் குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்

Jan19