பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என இயக்குனரும், நடிகருமான சேரன் தெரிவித்துள்ளா்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த அக்டோபர் 4ந் திகதி தொடங்கியது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் அதிக வாக்குகள் பெற்ற ஆரி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஆரிக்கு டைட்டில் வின்னருக்கான கோப்பையும் 50 இலட்சத்துக்கான காசோலையையும் கமல்ஹாசன் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.