More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது என கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது!
நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது என கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது!
Jan 20
நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது என கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது!

கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் சற்று தாமதமாக நடத்தப்பட்டன. அதில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.



இதற்கிடையே, 2021-ம் ஆண்டுக்கான நீட், ஜே.இ.இ. தேர்வுகள் விரைவில் நடைபெற இருக்கின்றன.



கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாணவ-மாணவிகளின் சுமைகளைக் குறைப்பதற்காக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான பாடத்திட்டங்களில் ஏதாவது மாற்றம் வருமா? என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.



இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் 2021-ம் ஆண்டு நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது.



ஜே.இ.இ. தேர்வை பொறுத்தவரையில் முந்தைய ஆண்டு பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறும். ஆனால் கூடுதலாக விருப்பத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி, இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் இருந்து தலா 30 வினாக்கள் வீதம் 90 வினாக்கள் கேட்கப்படும் என்றும், அதில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் தலா 25 வினாக்கள் வீதம் 75 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



ஆனால் நீட் தேர்வு தொடர்பாக வினாக்கள் கேட்கப்படும் முறை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த தேர்வும் ஜே.இ.இ. தேர்வு போல விருப்பத் தேர்வுகளாக நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun03

ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த

Apr11

மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக்

Feb23

வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் த

May28

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான

Jun03

தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்ப

Mar16

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற

Mar26

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்

Mar03

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசா

Apr23

பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம

Jan04

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக

Jan19

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆ

Nov04

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக

May29

சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த

Oct01

புதுடெல்லி கடந்த ஓராண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்ட

Oct07

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. 1972-ம் ஆண்டு அக