மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுள்ளன.
வெலிக்கடை மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளில் இருந்தே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையில் கைதிகள் தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுக்களை விசாரிக்க நான்கு மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் சிறைச்சாலைகள் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு அமைச்சர் லொஹான் ரத்வத்த ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடன்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.