More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது!
பிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது!
Jan 19
பிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது!

பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த முதல் நாளே புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.



ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் இத்திரைப்படத்தில் வித்யா பிரதீப் கதாநாயகியாகவும் முனிஷ்காந்த் உட்பட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.



அறிமுக இயக்குனர் அபின் மீது எல்லையில்லா அன்பும் கதையின் கருவில் உள்ள சுவாரசியத்திற்காகவும் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டு தமிழில் பல வெள்ளி விழா சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஆர்.சுந்தரராஜன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.



இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அடுத்தடுத்த கட்டங்களாக மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது.



இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டெர்லின் நித்தியா இப்படத்தின் இசையமைப்பாளராகவும் பி.வி.கார்த்திக் ஒளிப்பதிவாளராகவும் கமலநாதன் இப்படத்தில் கலை இயக்குனராகவும் பாடலாசிரியர் விவேக் பாடலாசிராயராகவும் பணியாற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct14

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க

Feb04

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் ரஜினி போன் ச

Sep02

வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்

Mar10

இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந

Oct13

‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்த

Mar13