கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச்சீரற்ற தன்மை நிலவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியை அதன் உற்பத்தியாளர்களும், உலக நாடுகளும் நியாயமான வகையில் விநியோகிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேட்டுக்கொண்டுள்ளார்.
49 உயர் வருமானம் கொண்ட நாடுகளில் 3.9 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் சென்றடைந்துள்ள நிலையில், ஆபிரிக்க ஏழை நாடான கினியாவில் வெறும் 25 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
தற்போது கொரோனா தடுப்பூசியை பகிர்ந்து கொள்ளும் விதமாக நாடுகளுக்கிடையே, இருதரப்பு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.