More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
Jan 19
பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகியது.



சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த சந்தை வளாகத்தின் கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றன.



கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவின் வழிப்படுத்தலுக்கு அமைய அந்த அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் இதன் கட்டுமான பணிகளை முன்னெடுக்கின்றது.



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் 14 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.



எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது இவ்வேலைத்திட்டத்தின் பணிகள் முழுமையாக கைவிடப்பட்டன.



இச்சந்தை வளாகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நுகர்வோருக்கு கட்டுமானத் துறையின் அனைத்து மூலப்பொருட்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.



இதேவேளை, சந்தை வளாகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம் CCity.lk நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பல கடைகளும் நேற்று உத்தியோகபூர்வமாக கடை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.



கொடுப்பனவுகள் தாமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் தேசிய இயந்திர நிறுவனத்தில் சேவையிலிருந்து விலகியிருந்த 50 ஊழியர்களுக்கு ரூ.233 இலட்சம் மதிப்பிலான உபகாரத்தொகை வழங்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug17

அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடா

Mar23

பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட

Feb04

கொழும்பு - பொரள்ளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு

Aug23

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர

Jan30

புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி

May24

கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்

Oct23

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில்

Apr25

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா

Mar09

சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல

Sep23

அடர்ந்த காடுகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில்இ வனவளப

Jan14

கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கில

Jun10

யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்து

Oct04

பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மில்லியன் பேருக்கு பாட

Feb03

“அவன்கார்ட் கனரக ஆயுதம்” என முட்டைக்கு பட்டப்பெயர

Jul03

ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்