More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சம்மாந்துறையில் பதற்றம்; ஒருவர் பலி - மூவர் கைது
சம்மாந்துறையில் பதற்றம்; ஒருவர் பலி - மூவர் கைது
Apr 08
சம்மாந்துறையில் பதற்றம்; ஒருவர் பலி - மூவர் கைது

பள்ளிவாசல் ஒன்றின்  நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்  கூட்டம்   ஒன்றின் பின் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இச்சம்பவம் நேற்று (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமம் -2 பகுதியில் அமைந்துள்ள  மஜ்ஜிதுல் முனீர்  பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றுள்ளது.



சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பள்ளிவாசல்களுக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்காக  இடம்பெற்ற நிர்வாக தெரிவு கூட்டம் ஒன்றில்,  சிலர் எதிர்வரும் நோன்பு  பெரு நாள் முடிந்தவுடன் நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு கோரியதுடன் மற்றுமொரு  குழுவினர்  சில  தினங்களில் புதிய நிர்வாகம்  தெரிவு செய்ய பட வேண்டுமென  தெரிவித்திருந்தனர்.



இதனை அடுத்து  எதிர்வரும்  ஞாயற்றுக்கிழமை புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய தீர்மானித்த நிலையில் குறித்த கூட்டம் நிறைவடைந்திருந்தது.



இந்நிலையில் கூட்டத்தை நிறைவு செய்து திரும்பியவர்கள் இரு குழுக்களாக பிரிந்து  மோதலில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.



மேலும், இந்த மோதல் சம்பவத்தில்  65 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறை  மலையடி கிராமம் கிராம சேவையாளர் பிரிவு 4  பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி  பலியாகியுள்ளார்.



சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய    மூவரை கைது செய்து மேலதிக விசாரணையை  மேற்கொண்டு வருகின்றனர். 



மேலும் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan29

உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து

Feb07

இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில்

Jan29


சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப

Sep20

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக

Aug31

யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர

Feb11

இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா

May15

இந்தியாவில் இருந்து டீசல் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்த

Sep21

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக

Apr03

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா

Jan22

சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்

Oct25

தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத

Jul13

மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுத

Feb02

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த

Feb04

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாண

Feb03

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்