More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழ். மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
யாழ். மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
Apr 07
யாழ். மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் நாளை  (08) முதல் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விற்பனை விலையில் இருந்து 10 ரூபா விலை குறைத்து விற்க உணவக உரிமையாளர்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.



யாழ். வணிகர் கழகத்தில் இன்று மாலை உணவக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட வணிகர் கழகத்தின் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார்.



பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொருட்களின் விலைகள் அதிக அளவில் காணப்பட்டது.



தற்பொழுது நாட்டில் ஓரளவுக்கு பொருளாதாரம், சீரடைந்து வருவதாக நாங்கள் அறிகின்றோம்.



எரிபொருட்கள் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.



குறிப்பாக உணவு பண்டங்களிலும் சீனி, மாவு, ஏனைய சில பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் எரிபொருளின் விலையும் குறைவடைந்துள்ளது.



போக்குவரத்து செலவுகள் குறைவடைகின்றது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம்.



இந்த கூட்டத்தில் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பு , அந்த அடிப்படையில் குறைந்த அளவு குறைப்பதற்கு நாங்கள் இந்த கலந்துரையாடலில் எட்டி இருந்தோம்.



தற்பொழுது யாழ்ப்பாணம் குடாநாட்டில் விற்பனை செய்கின்ற பிளேன் டி மற்றும் மாதேனீர் , தற்பொழுது விற்பனை செய்யும் விலையில் இருந்து பத்து ரூபாய் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.



அதேபோல் கோதுமை மாவில் செய்யப்படுகின்ற ரொட்டி தற்போது விற்பனை செய்யும் விலையில் இருந்து பத்து ரூபாய் குறைத்து விற்பனை செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul18

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ர

Oct17

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை கடந்த ஒரு மாதத்தில் ஒ

May17

காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளு

Sep19

தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ஆம் திகதி முதல் நேற்று வரை

May09

காலி முகத்திடலில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போர

Oct07

148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சல

Sep29

சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்

Jul04

நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய ச

May29

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நேரத்தில் அந்நாட

Sep26

இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவத

Feb08

இலங்கையில் நேற்றைய தினம் மேலும் ஆயிரத்து 625 சுகாதார பி

Aug31

தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர

Oct24

சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டைய

Oct20

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசிய

Oct25

நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு