ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் மரணத்துக்கு முன்னர் அந்த பெண் முகங்கொடுத்த சம்பவங்கள் அடங்கிய சிசிரிவி கெமரா காட்சிகள் பெண்ணின் உறவினர்களின் சட்டத்தரணிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன் விஷ்மா சந்தமாலி அவரது 33 ஆவது வயதில் உயிரிழந்திருந்தார்.
அவர் விசா நிபந்தனைகளுக்கு முரணாக தங்கியதால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒகஸ்டில் குடிவரவு பணியகத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
2021 மார்ச் 6 ஆம் திகதி சந்தமாலியின் உடல்நிலை திடீரென மாறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது மரணத்திற்குப் பிறகு, விஷ்மாவின் சகோதரி வயோமி நிசங்சலா ஜப்பான் சென்று அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
அந்த முநைப்பாட்டில், தனது சகோதரியை அதிகாரிகள் கொன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
"இந்த வீடியோவைப் பார்த்து, எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன், மேலும் என் சகோதரிக்கு பெரும் அநீதி இழைத்ததை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்" என வயோமி நிசங்சலா தெரிவித்துள்ளார்.