யுவதி ஒருவரின் துண்டான கையை 4 மணி நேர சத்திர சிகிச்சைக்கு பின்னர் வெற்றிகரமாக பொருத்தி கேகாலை வைத்தியசாலையின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
யுவதியின் உடலில் இருந்து துண்டான கை நேற்று முன்தினம் நள்ளிரவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அதனை வெற்றிகரமாக இணைத்ததாக கேகாலை வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கேகாலை எரதுபதுபிட்டிய பிரதேசத்தில் இரண்டு குடும்பத்தினருக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் 21 வயதான யுவதியின் வலது கையின் கீழ் பகுதி துண்டாகியுள்ளது.
துண்டாகியை கை பகுதியை ஐஸ் கட்டிகள் இடப்பட்ட பையில் இட்டு, யுவதியுடன் அயல் வீட்டினர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் போது உடனடியாக செயற்பட்ட விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்ன உள்ளிட்ட மருத்துவர்கள் குழு, யுவதியின் கையை இணைக்கும் சத்திர சிகிச்சையை இரவு 9 மணியளவில் ஆரம்பித்தனர்.
சத்திர சிகிச்சைக்கு பின்னர் யுவதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது உடல் நிலை தேறிவருவதாக மருத்துவர் ஆனந்த ஜயவர்தன கூறியுள்ளார்.