நேற்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிவாயு விலை திருத்தத்தை தொடர்ந்து பல பொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஃபிரைட் ரைஸ், சோறு, கறி மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 20% குறைக்கப்படும்.
ஃபிரைட் ரைஸ், சோறு, கறி, மற்றும் கொத்து ஒரு பொதி 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
மேலும், பிலேன் டீ விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்.
ஒரு கப் பால் டீயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படும்.
இதேவேளை, பேக்கரிகளுக்கு முட்டை விலை குறைக்கப்படும் வரை பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்றும் அசேல சம்பத் தெரிவித்தார்.