இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக முன்பே திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருள் இருப்புகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
முச்சக்கர வண்டிகளுக்கு 5லீட்டரில் இருந்து 8லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு 4லீட்டரில் இருந்து 7லீட்டராக
பேருந்துகளுக்கு 40லீட்டரில் இருந்து 60லீட்டராக
கார்களுக்கு 20லீட்டரில் இருந்து 30லீட்டராக
லொரிகளுக்கு 50லீட்டரில் இருந்து 75லீட்டராக
சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20லீட்டரில் இருந்து 30லீட்டராக
வேன்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30லீட்டராக
land vehicles 15 லீட்டரில் இருந்து 25 லீட்டராக
quadric cycle 4 லீட்டரில் இருந்து 6லீட்டராக