டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளார். இதுவரை இருந்த நீல நிற குருவிக்கு பதிலாக “நாய்" லோகோவாக மாற்றப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் கடந்த வருடம் ஒக்டோபரில் 44 பில்லியன் டொலருக்கு ட்விட்டரை வாங்கியதிலிருந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அதில் ஒன்றாக லோகோவும் மாற்றப்பட்டுள்ளது.
ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது. Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது.
நகைச்சுவையாக பணம் செலுத்தும் முறையை உருவாக்கமென்பொருள் பொறியாளர்களான பில்லி மார்கஸ் மற்றும் ஜாக்சன் பால்மர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட Dogecoin கிரிப்டோகரன்சி முறையை எலான் மஸ்க் நீண்ட காலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் லோகோ மாற்றப்பட்டதால் Doge coin கிரிப்டோகரன்சியின் மதிப்பு 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.