கடந்த சில நாட்களில், 87,000 குடும்பங்கள் கட்டணம் செலுத்தாத காரணத்தால் அவர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மின் பாவனையும் 20 வீதத்தால் குறைந்துள்ளது என சுதந்திர மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகும் மக்களின் பிரதிபலிப்புகளை அரசாங்கம் அறிந்திருப்பதனால் அரசாங்கம் பெரிய அளவிலான அடக்குமுறைக்கு தயாராகி வருவதாகவும் றிப்பிட்டுள்ளார்.
அதற்கான சட்ட அடிப்படையை நிறுவும் வகையில், மிகவும் ஆபத்தான சட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சிக்கிறது என்றும் பீரிஸ் தெரிவித்தார்.
உத்தேச பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்று ஆபத்தான எந்த சட்டமூலமும் கடந்த இரண்டு தசாப்தங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட இது மிகவும் ஆபத்தானது என்றார்.
மக்கள் கருத்து இல்லாத அரசாங்கத்திற்கு இவ்வாறான சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு எந்த சட்டபூர்வ அங்கீகாரமும் கிடையாது என தெரிவித்த பீரிஸ், ஆணையை உதைத்து மக்களை ஏமாற்றும் இந்த திட்டத்தை அனுமதிக்க தற்போதைய பாராளுமன்றத்திற்கு தார்மீக உரிமை இல்லை எனவும் தெரிவித்தார்.