கதிர்காமம் - வெடிஹிதி கந்த வீதியில் இன்று (ஏப்ரல் 02) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வெடிஹிதி கந்த பகுதியில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குற்றவாளிகள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதால், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
காயமடைந்தவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 46 வயதுடைய பிரதீப் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டின் போது பின்னால் இருந்தவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.