More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பூமியை விட 20 மடங்கு பெரிது!! சூரியன் குறித்து நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி
 பூமியை விட 20 மடங்கு பெரிது!! சூரியன் குறித்து நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி
Mar 30
பூமியை விட 20 மடங்கு பெரிது!! சூரியன் குறித்து நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி

சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதாக சூரியனின் அமைப்பு மற்றும் செயற்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்து வரும் நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் கூறுகின்றது.



இது கரோனா ஓட்டை என விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகின்றது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போயுள்ளது போன்று தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த கரோனா ஓட்டையை சூரியனின் தென்துருவ பகுதியருகே கடந்த 23-ம் திகதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் கண்டறிந்துள்ளது.



இதனால், புவிகாந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்பட கூடும் என்று அமெரிக்காவின் என்.ஓ.ஏ.ஏ. அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.



இதனை முன்னிட்டு அந்த பெரிய ஓட்டையில் இருந்து புறப்பட கூடிய, மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீற்றர் வேகத்தில் வீச கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும் அது வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.



தொடர்ச்சியாக சூரியனில் இருந்து வரும் ஆற்றல் நிறைந்த துகள்களால், பூமியின் காந்தபுலம், செயற்கை கோள்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் இணைய வலையமைப்பு போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 



இந்த சூரிய காற்று அல்லது புவிகாந்த புயல்கள், விண்வெளியில் உடனடியாக பரவுவதற்கு கரோனா ஓட்டை அனுமதிக்கின்றது. 



தற்போது ஏற்பட்டுள்ள இந்த கரோனா ஓட்டை அளவில் 3 லட்சம் கிலோ மீற்றர் முதல் 4 லட்சம் கிலோ மீற்றர் வரை பரந்து விரிந்துள்ளது. 



இதன்படி, 20 முதல் 30 பூமிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வைக்கப்பட்டால் எவ்வளவு பெரிதோ அந்த அளவுக்கு உள்ளது என்று நாசாவின் அறிவியல் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் யங் என்பவர் கூறியுள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul25

இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் 

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மச

Sep21

அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்பட

Apr26

ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர

Mar12

உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவ

Apr01

ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில்

Aug27

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு

May29

ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்ட

Sep30

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்

Jun12

உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு

உக்ரைனுக்கு எதி

Jul16

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக

Jul23

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

May09

ரஷ்யா அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவைத் தாக்கினால், ப

May18

உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப

May24

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட