யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்றுலாப் பயணிகள் கண்டுள்ளனர்.
இந்த கருஞ்சிறுத்தையை அவர்கள் புகைப்படம் எடுத்துள்ள நிலையில் அது ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
நேற்று காலை யால தேசிய பூங்காவிற்குள் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் இந்த அரியவகை கருஞ்சிறுத்தை அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ள சஃபாரி ஒட்டுனர் ஒருவர், தமது 30 வருட அனுபவத்தில் முதல் தடவையாக கருஞ்சிறுத்தையை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்
அந்த விலங்கு முதலில் ஒரு பாறையில் நின்றதாகவும் பின்னர் அது தனது தாயுடன் மறுபுறம் செல்லும் பாதையைக் கடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.