எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற இறக்குமதிப் பொருட்களின் விலைகள் விரைவில் குறைக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
உருளைக்கிழங்கு, வெங்காயம், சீனி, பருப்பு, மிளகாய் போன்ற பொருட்கள் நேரடியாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
டொலருடன் பரிவர்த்தனை செய்து இறக்குமதி செய்யப்படும் மற்ற அனைத்து முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விரைவில் குறையும் என்றும், அதன் பயனை நுகர்வோர் பெறுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.