கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2 ஆம் இலக்க நடவடிக்கை பிரிவில் குண்டு ஒன்று உள்ளதாக கையடக்கத் தொலைபேசி ஊடாக தகவல் அளித்த 14 வயது சிறுவன் ஒருவனைக் கைது செய்த பொலிஸார் அவரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.
நேற்று (25) மாலை குறித்த மாணவன் விமான நிலைய அவசர அழைப்பு இலக்கத்துக்கு அழைப்பெடுத்து அங்கு குண்டு இருப்பதாக கூறியுள்ளார்.
அதற்கமைய உடனடியாக பொலிஸார் குறித்த விமான நிலைய பகுதியை சோதனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
பின்னர் மீண்டும் சிறிது நேரத்தில் அழைப்பெடுத்து தான் கேலிக்காக அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து களுபோவில பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவனை பொலிஸ் நிலையம் அழைத்து கைது செய்து, வாக்கு மூலம் ஒன்றினை பெற்ற பின்னர் கடுமையாக எச்சரித்து பொலிஸார் விடுவித்துள்ளனர்.