More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • IMF நிதி கிடைத்தது! ஜனாதிபதியின் விசேட அறிக்கை
IMF நிதி கிடைத்தது! ஜனாதிபதியின் விசேட அறிக்கை
Mar 22
IMF நிதி கிடைத்தது! ஜனாதிபதியின் விசேட அறிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வசதி தொடர்பில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.



ஜனாதிபதி தனது உரையில், 



சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்குமான ஒரு படியாகும். கடன் வசதிகளின் 4 ஆண்டுகளில் மொத்தமாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படவுள்ளதுடன், முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



மேலும், ஏனைய நாடுகள் மற்றும் ஏனைய கடன்கொடுநர்களிடமிருந்து விரைவான கடன் ஆதரவில் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.



சிலர் இந்த கடன் வசதியை இன்னொரு கடனாகவே கருதுவதாகவும், மேலும் சிலர் நாட்டின் மொத்த கடனை பெற்ற தொகையை கொண்டு செலுத்த முடியாது எனவும் கூறுகின்றனர்.



இந்த அறிக்கைகள் அறியாமை அல்லது அரசியல் இலாபத்துக்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விருப்பத்தை காட்டுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.



இந்த கடன் வசதி இலங்கையின் சர்வதேச அங்கீகாரத்தை மீட்டெடுக்கும், நாடு வங்குரோத்தாகாமல் இருப்பதை உறுதிசெய்து, உள்நாட்டு வங்கிகள் சர்வதேச அங்கீகாரத்தை மீண்டும் பெற உதவும்.



இது குறைந்த வட்டியில் கடனுக்கான வாய்ப்புகளை உருவாக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் மற்றும் வலுவான புதிய பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.



பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும், சகலவிதமான அழுத்தங்களையும் தாங்கிக்கொண்டும், சம பலத்துடன் துன்பங்களை அனுபவித்தும் இந்நாட்டு மக்கள் அமைதியாகவும் பொறுமையுடனும் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். கடன் வசதியை அடைவதில் அவர்களின் அர்ப்பணிப்பு பெரும் பலமாக இருந்தது. எனவே, இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.



நாங்கள் இப்போது ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். செயல்முறை முழுவதும் நாம் பல பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.



நமது வெற்றிக்கான அடித்தளம் இந்தப் பாதையில்தான் இருக்கும். இவற்றில் சில சீர்திருத்தங்கள் ஏற்கனவே 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டுத் திட்டம் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம் மூலம் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல சீர்திருத்தங்களை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம்.



2025 ஆம் ஆண்டளவில் முதன்மைப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% ஆகக் குறைக்கவும், 2026 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% வருவாயை அதிகரிக்கவும் அரசாங்கம் இலக்காக நிர்ணயித்துள்ளது.



நிலையான வருமான வரி வீதம் 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் துறை சார்ந்த வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளன. உழைக்கும்போது செலுத்தும் வரி வீதம் 12% இல் இருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரி விலக்கு வரம்பு 300 மில்லியன் ரூபாவிலிருந்து 80 மில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம

Jun25

தற்போது நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வை

May01

பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா

Aug18

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற

Oct24

தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த

Feb08

சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ

Mar08

 நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ

Dec29

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அ

Apr15

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள

May03

நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு

May03

ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர

Oct18

புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத

Jul01

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ

Feb09

சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர

Mar02

ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச