பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான்னின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணைகள் கடந்த 4 ஆண்டுகளாக இடம்பெற்று வந்துள்ளதுடன் குற்ற ஒப்புதல் வாதப்பிரதிவாதங்கள், பிணை விண்ணப்பம் என தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன.
இதன் போது 25,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிபதி, பிரதிவாதி வெளிநாடு செல்லவும் பிணையாளர்கள் வெளிநாடு செல்லவும் தடை உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் சஹ்ரானின் மனைவி ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என உத்தரவிட்டார்.