மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பலியானதோடு மேலும் இரு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் பேருவளையைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் முஹம்மது ரிலா என்பவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த இருவரும் தற்போது அந்நாட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் மடகஸ்கார் நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.