கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கம்பஹா - நுங்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரை கத்தியால் வெட்டி காயப்படுத்தியதாக குற்றச்சாட்டப்படும் வைத்தியரின் கணவர், கம்பஹா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர் என பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் வைத்தியரின் முதுகு மற்றும் கைகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியரின் கையடக்கத் தொலைபேசியில் காணப்பட்ட தொலைபேசி இலக்கமொன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியததையடுத்து சந்தேகநபரான கணவர் கத்தியால் வெட்டி, அவரை காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.