More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கடிதம் எழுதி வைத்து விட்டு யாழ். மாணவன் தற்கொலை முயற்சி
கடிதம் எழுதி வைத்து விட்டு யாழ். மாணவன் தற்கொலை முயற்சி
Mar 13
கடிதம் எழுதி வைத்து விட்டு யாழ். மாணவன் தற்கொலை முயற்சி

யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால்  காப்பாற்றப்பட்டுள்ளார்.



இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருப்பதாக வைத்தியசாலை வட்டரங்களில் இருந்து அறிய முடிகிறது.



இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 



இன்று நண்பகல் குறித்த மாணவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்குடன் பாடசாலையிலுள்ள மாடிக் கட்டிடம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்துள்ளான். 



எனினும், பாடசாலைக்கான மின்மார்க்க வயர்களில் சிக்குண்டதன் காரணமாக மாணவன் நேரடியாக நிலத்தில் விழாததால் உயிராபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. 



சக மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் மீட்கப்பட்ட மாணவன் உடனடியாக அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.



மாணவனின் புத்தகப் பையிலிருந்து தன்னுடைய உயிர் மாயப்பினை நியாயப்படுத்தும் வகையிலான 7 பக்கங்களைக் கொண்ட மிக நீண்ட கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.



நிகழ்நிலை மற்றும் கணினி விளையாட்டுகளில் ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டின் காரணமாகக் குறித்த மாணவன் அண்மைக் காலமாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுத் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தினால் காயமேற்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்

Sep21

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு

May13

  “கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட

Jan18

கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு

Feb02

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக நாடாளுமன்ற உற

Feb03

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி

Feb03

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்

Feb13

அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ

Oct05

வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்

Oct02

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தான

Mar19

கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத

Feb11

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ

Sep24

68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின்

Apr11

தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர

Jan19

நாட்டில் ஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்கள் எண்ண