More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • CEB மறுசீரமைப்பு தொடர்பில் அவசர கலந்துரையாடல்!
CEB மறுசீரமைப்பு தொடர்பில் அவசர கலந்துரையாடல்!
Mar 13
CEB மறுசீரமைப்பு தொடர்பில் அவசர கலந்துரையாடல்!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் நேற்று மாலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும், இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.



அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபையுடன் இணைந்த அனைத்து தொழிற்சங்கங்களும் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர்  தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் நீண்ட விளக்கமளித்துள்ளார்.



இதேவேளை, அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட சில விடயங்களுக்கு இணக்கம் காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.



மேலும், இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுடனான கூட்டு ஒப்பந்தம், மின்சாரக் கட்டணங்கள், அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் அது தொடர்பான ஏனைய விடயங்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct24

தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த

Sep19

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட

Oct06

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GS

Mar27

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின

Jan22

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ

Jan19

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங

Jun02