More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • காதலிக்காக பொலிஸ் நிலையத்திற்குள் கழுத்தை அறுத்துக்கொண்ட இலங்கை அகதி
காதலிக்காக பொலிஸ் நிலையத்திற்குள் கழுத்தை அறுத்துக்கொண்ட இலங்கை அகதி
Mar 12
காதலிக்காக பொலிஸ் நிலையத்திற்குள் கழுத்தை அறுத்துக்கொண்ட இலங்கை அகதி

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் எட்டயபுரம் பொலிஸ் நிலையத்தில் கண்ணாடியால் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த பெயிண்டரான பிரசாந்தன் துஷாந்தன் (20) எட்டயபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியை காதலித்து வந்துள்ளார்.



கடந்த 4ஆம் திகதி துஷாந்தனும் அந்த மாணவியும் மாயமாகி உள்ளனர்.



இது குறித்து மாணவியின் பெற்றோர் எட்டயபுரம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.



விசாரணையில் துஷாந்தன் பிளஸ்-1 மாணவியை அழைத்துக் கொண்டு பழனிக்கு சென்றது தெரியவந்தது.



இதையடுத்து பொலிஸார் அங்கு சென்று அவர்கள் 2 பேரையும் மீட்டு நேற்று முன்தினம் மதியம் எட்டயபுரம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.



அப்போது துஷாந்தன் மாணவியை கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.



அதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலைய வளாகத்தில் இருந்த கண்ணாடி டம்ளரை எடுத்த அதை உடைத்து கண்ணாடி துண்டால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.



இதில் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வரவே அவர் மயங்கி விழுந்துள்ளார்.



உடனே பொலிஸார் அவரை மீட்டு எட்டயபுரம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மீட்கப்பட்ட மாணவி தூத்துக்குடி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இ

Jul17

தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள

Jan25

புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து

Aug07

ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற

Apr11

ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில்  இன்று நடிகை

Sep17

ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச

Sep10

பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்ப

Feb22

ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி

Aug25

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ

Jun24

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்

Jul01