வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெறுவதற்காக குழந்தையை கொடுமைப்படுத்திய தந்தையை கைது செய்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது ஒன்றரை வயது மகளை பக்கமுன - தாரகல்லேவ பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி, அடிப்பதை காணொளியாக பதிவு செய்து மனைவிக்கு அனுப்பியுள்ளார்.
குழந்தையை கொடூரமாக சித்திரவதை செய்யும் காணொளிகளை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு தந்தை அனுப்பியதாகவும், அந்த காணொளியை வெயங்கொடை பொலிஸாருக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்குமாறு தாய் கூறியதையடுத்து குழந்தையின் பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹிகுராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பக்கமுன பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்