More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • விடுதலைப் புலிகள் அமைப்பை தடை பட்டியலிலிருந்து நீக்கக் கோரி மனு!
விடுதலைப் புலிகள் அமைப்பை தடை பட்டியலிலிருந்து நீக்கக் கோரி மனு!
Mar 09
விடுதலைப் புலிகள் அமைப்பை தடை பட்டியலிலிருந்து நீக்கக் கோரி மனு!

இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளை அமைப்பை நீக்கவேண்டும் என்று கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி ருத்ரகுமாரன், இந்திய உள்துறை அமைச்சுக்கு இது தொடர்பிலான விண்ணப்ப கடிதத்தை  அனுப்பியுள்ளார்.



இதில் தமிழீழ விடுதலைப்புலிகளை ஏன் இந்தியாவின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்பதற்கான நியாயங்கள் கூறப்பட்டுள்ளன.



2019ஆம் ஆண்டு முதல் இந்த கோரிக்கையை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்து வருவதாக ருத்ரகுமாரன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்



தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைக் காரணமாக, இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பணியாற்றுவதில் சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்த விண்ணப்பக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



நிபுணரின் அறிவிப்புகளின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப்புலிகள் தற்போது எந்தவொரு நிறுவன கட்டமைப்பான அமைப்பையும், எந்தவொரு நிறுவன கட்டமைப்பையும் கொண்டிருக்கவில்லை என்பது இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கான காரணமாக, பிராந்தியத்திற்கும் இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கும் அச்சுறுத்தல் என்ற விடயத்தை இந்தியா, வலியுறுத்தி வருகின்றபோதும், அதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது மனுவில் மறுத்துள்ளது.



இந்தநிலையில் தமிழ்மக்களின் அபிலாசைகளை முன்னெடுக்க இந்தியாவின் ராஜதந்திர உதவி அவசியம் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனுவில் கோரப்பட்டுள்ளது.



இதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கை, இந்திய மக்களின் ஒருமைப்பாட்டையும், பிராந்திய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது.



அத்துடன் தமிழீழம் இந்தியாவுடன் சிறப்பான உறவை கொண்டிருக்கும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட

May12

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்க

Feb04

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபத

Jan13

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இலங்கை

Mar15

தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடி

Mar05

கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளி

Feb04

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஆயுதப் படைகளி

Jun20

இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்

Jan30

காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ

Apr07

மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந

Jan27

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய

Feb13

இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொ

Jul01

புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்

Jan11

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவின

Sep22

உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை