இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் அதே வேளையில், 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும் தற்போது வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
குறித்த தொழில்துறையில் இருப்பவர்களின் கருத்துப்படி, இலங்கையின் பொருளாதாரத்துறை வெகுவாக மோசமடைந்து வரும் கடந்த சில மாதங்களுக்குள், பெருமளவிலான ஆண்கள் பாலியல் வலைத்தளங்களில் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இந்த வலைத்தளங்களில் இலங்கை என்ற பிரிவுக்குள் தேடும் போது பட்டியலிடப்பட்ட இலங்கை ஆண்கள் 20 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கான கட்டணம் சேவையைப் பொறுத்து தீர்மானி்க்கப்படுகிறது.
பெரும்பாலும் 20 அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 500 அமெரிக்க டொலர்கள் வரை இவர்களுக்கான கட்டணம் சேவையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.