More forecasts: 30 day weather Orlando

நிகழ்வுகள்

  • All News
  • ஹோல்புறூக் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா
ஹோல்புறூக் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா
Mar 07
ஹோல்புறூக் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா

அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த 04 ஆம் திகதி  சனிக்கிழமை அன்று   காலை 7 .30 மணிக்கு விநாயகர் வழிபாடுகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் திருவிழா இனிதே ஆரம்பமாகியது.



அதனைத் தொடர்ந்து.ஆகுரோயா ஆற்றிலிருந்து பால்குடம் பவனி  பக்தர்களின் அரோகரா கோஷத்தோடு மேளம் வாத்தியம் முழங்க  ஆலயத்தை வந்தடைந்தது.



திருவிழாவில் 06 ஆம் திகதி காலை 7 மணி தொடக்கம் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம் பெற்று வசந்த மண்டல பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றதோடு மும்மூர்த்திகளின் உருவ சிலைகள் ஆலயத்தில் உள்வீதி வலம் வந்து தொடர்ந்து முத்தேர் பவனி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.