கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளது.
முகத்துவாரம் மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டள்ளதாகவும், குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை, இப்பஹங் சந்தியில் வைத்து ஓட்டோவொன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.
துப்பாக்கிதாரியின் இலக்கு தவறியுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.