இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு காணப்பட்ட மிகப் பெரிய தடை நீங்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, IMF தலைமையிலான கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஆதரவு அளிப்பதாக சீனா நேற்று உறுதி செய்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
மறுசீரமைப்புக்கான IMF இன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் மக்கள் பட வேண்டிய கஷ்டங்களுக்கு அரசாங்கம் என்ற முறையில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்கட்சியின் ஒத்துழைப்பை அரசாங்கம் கோருகின்றது.
இதேவேளை, மறுசீரமைப்பு செயல்முறையை நாசப்படுத்தினால், அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று எச்சரிக்கிறது.