ஹுங்கம கடற்பரப்பில் ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கஹந்தமோதர மீன்பிடி துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மது அருந்திவிட்டு நீந்த முற்பட்ட வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கஹந்தமோதர மீன்பிடி துறைமுகத்தில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என மூன்று வெளிநாட்டு பிரஜைகள், மது அருந்திக் கொண்டிருந்த போது, போதையில் நீந்த முயன்ற நபர் உயிரிழந்துள்ளார்.
பின்னர் அவர் நீரில் மூழ்கி இறந்த நிலையில், மேலும் அவரது உடலை கடலில் இருந்து அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 47 வயதுடைய ரஷ்ய நாட்டவர் என தெரியவந்துள்ளது. நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.