பாண், பனிஸ் போன்ற பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பாணின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் என்றும், பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றார்.
சில பிரதேசங்களில் பாண் 150, 160, 170 மற்றும் 180 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.