More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய்த் தூள் பூசிய கணவன்!!
மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய்த் தூள் பூசிய கணவன்!!
Mar 03
மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய்த் தூள் பூசிய கணவன்!!

பாதுக்க - அங்கம்பிட்டியவில் மனைவியின் உடலில் ஒருதுண்டு துணி இல்லாமல்,  அவருடைய கண்கள் மற்றும் கைகளை கட்டிவிட்டு, உடல் முழுவதும் மிளகாய் தூள் பூசிய கணவனைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.



சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயான 39 வயதான பெண் இது தொடர்பில், பாதுக்க பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.



மதுபோதையில் வந்த தன்னுடைய கணவன், தன்னுடைய கண்களையும் கைகளையும் கட்டிவிட்டு அட்டை அல்லது புழுவொன்றை தன்னுடைய உடலுக்குள் செலுத்தினார். அது தனக்கு கடுமையான வலியை ஏற்படுத்தியது என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அவ்வாறு செய்வதற்கு இடமளிக்காமல் விட்டால், கடுமையான தாக்குதல்களை மேற்கொள்வார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தன்னுடைய 11 வயதான மகளின் முன்னிலையிலேயே இவ்வாறு தாக்குதல் நடத்துவார் எனத் தெரிவித்த அந்த பெண், இதனால் மகளும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், நான்கு வயதில் குழுந்தையொன்றும்  தனக்கு இருக்கிறது என்றும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.



சந்தேகநபர் சாரதியாக கடமையாற்றுபவர் என்றும் அவருக்கு நிரந்த தொழில் இல்லை என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், சந்​தேகநபரான அவருடைய கணவன் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார் என்றும் அவரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

கொரோனா தொற்றின் பின்னர் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழ

Feb03

மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்

Mar07

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந

Sep30

கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு

Jul26

வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம

May10

நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ

Feb18

இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ

Oct14

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான

Jan16

இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தின் பிரதான வருமான

Jul23

யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இ

Jun17

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய

Apr21

ரம்புக்கனை பொலிஸ் பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த

Apr19

உயிர்த்தஞாயிறுதின  குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர

May02

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி

May22

வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்த