More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • தோழிக்கு புதின் அன்பளித்த மாட மாளிகை!
தோழிக்கு புதின் அன்பளித்த மாட மாளிகை!
Mar 03
தோழிக்கு புதின் அன்பளித்த மாட மாளிகை!

 புதின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெண்ணுக்கு, ரஷ்யாவின் மிகப்பெரும் நவீன மாடமாளிகையை கட்டி அன்பளித்துள்ளார்.



ரஷ்ய அதிபர் புதினுக்கு தற்போது 70 வயதாகிறது. இவரது 20 ஆண்டுகால தோழியாக அறியப்படுவபர் அலினா கபாவே. இவருக்கு தற்போதைய வயது 39. ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக ரஷ்யாவை திரும்பி பார்க்க வைத்த அலினாவை, புதினும் திரும்பிப் பார்த்தில், அதிபருக்கு மிகவும் நெருக்கமாக மாறிப்போனார் அலினா. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்கும் அலினா, அதன் பின்னர் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராகவும் சிலகாலம் இருந்தார்.



புதினின் அன்பு கிடைத்ததும், ரஷ்யாவின் அறிவிக்கப்படாத ராணியாகவே வலம் வந்தார். தற்போது தோழிக்காக புதின் கட்டி முடித்து பரிசாக அளித்திருக்கும் மாட மாளிகையே ரஷ்யாவுக்கு அப்பாலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது போர்த் தாக்குதலை தொடங்கியதும் புதினுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் பரிசீலித்தன. ஐரோப்பிய நாடுகளோ அலினா மீதான பொருளாதாரத் தடை குறித்து யோசித்தது. அந்தளவுக்கு புதினின் பெரும் சொத்துக்கள் அலினா வசமே புதைந்து கிடக்கின்றன.



அதிலும் 20 அறைகள், சினிமாக்கூடம், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாளிகையை கட்டி முடித்து அலினாவுக்கு பரிசளித்திருக்கிறார் புதின். இதற்காக இங்கிலாந்து பவுண்ட் மதிப்பில் 1 கோடிக்கான ரஷ்ய அரசு நிதியை முறைகேடாக புதின் திருப்பிவிட்டிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. ஏரி ஒன்றின் கரையில் முழுக்கவும் மரங்களை இழைத்து உருவாக்கப்பட்ட இந்த மாளிகை குறித்த செயற்கைக்கோள் படங்களும், அதற்கு ஆனதாக சொல்லப்படும் செலவினங்களும், உக்ரைன் போருக்கு நிகராக உலகளவில் பேசு பொருளாகி இருக்கின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug27

ஆப்கானிஸ்தானில் 

ரஷிய படைகளின் தாக்குதல்கள் உக்ரைனில் நேற்று 11-வது நாளா

Mar08

கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந

May11

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள

Apr07

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்

Mar26

கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொர

Mar07

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Apr25

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர

Feb13

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா விதிகள் மற்றும் எரிப

Mar23

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந

Feb04

கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம

Mar07

மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் ச

Mar09

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, ரஷயாவில்

Mar07

ரஷ்யாவின் புதிய போலிச் செய்திச் சட்டத்தினால் டிக்டொக

Mar06

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி