வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை நடவடிக்கைகள் சத்திர சிகிச்சை நிபுணர்களினால் முல்லைத்தீவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அகிலன் தலைமையிலான குழுவினரால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு ஆறு மணி நேர முயற்சியின் பலனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையொன்றில் முதல் முதலாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட வைத்தியசாலையிலும் இந்த அறுவை சிகிச்சை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.